வரதட்சணை கேட்ட மூவர் மீது வழக்கு
போடி: போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா 30. இவர் போடி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தார். அப்போது அதே கல்லூரியில் வேலை பார்த்த சீலையம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் 34. காதலித்துள்ளார். பெற்றோர்கள் சம்மதத்துடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இந்நிலையில் ராஜேஷ் அவரது தந்தை கருப்பையா இருவரும் சேர்ந்து வெண்ணிலாவிடம் வரதட்சணையாக நகை, பணம் வாங்கி வாங்கி வந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என பேசி உள்ளனர். கர்ப்பிணியான வெண்ணிலாவை கத்தியை காட்டி மிரட்டி அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். அதன் பின் வெண்ணிலாவிற்கு தெரியாமல் வைஷ்ணவி என்ற பெண்ணை ராஜேஷ் 2 வது திருமணம் செய்துள்ளார். வெண்ணிலா புகாரில் கணவர் ராஜேஷ், மாமனார் கருப்பையா உட்பட மூவர் மீது போடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.