இரு தரப்பு தகராறில் 10 பேர் மீது வழக்கு
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே உப்புத்துறையைச்சேர்ந்த விவசாயி செல்வராஜ் 60, இவர் கடமலைக்குண்டைச் சேர்ந்த சிலம்பரசன் 36, என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். பணம் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கொடுத்த புகாரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமினில் வெளி வந்த செல்வராஜ் தரப்பினர் ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் காலை, மாலையில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் மற்றும் அவரது மனைவி கோகிலா 34, கருப்பசாமி 44, சங்கிலி 46, சென்றாயன் 44, மற்றும் சிலர் உப்புத்துறையில் உள்ள செல்வராஜ் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மரச்சேர், கம்பி வலைகள், கூரை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியும், பீரோவை உடைத்து அதிலிருந்த 21 பவுன் நகை மற்றும் 19 லட்சம் பணத்தை எடுத்து சென்றதாக செல்வராஜ் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சிலம்பரசன் மற்றும் அவரது மனைவி உட்பட 10 பேர் மீது போலீசார் விசாரிக்கின்றனர்.