உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தாய், மகனை தேனியில் கடத்தி திருமங்கலத்தில் இறக்கி விட்ட கும்பல் பெண் புகாரில் 6 பேர் மீது வழக்கு

 தாய், மகனை தேனியில் கடத்தி திருமங்கலத்தில் இறக்கி விட்ட கும்பல் பெண் புகாரில் 6 பேர் மீது வழக்கு

தேனி: பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒரு தரப்பினர் தேனியில் தாய், மகனை கடத்தி திருமங்கலத்தில் இறக்கி விட்டதாக கோடங்கிபட்டி சாய்பாபா நகர் மல்லிகா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கோடங்கிபட்டி சாய்பாபா நகர் மல்லிகா 53. இவரது மகன் துர்கேஷ் 21. மல்லிகா நேற்று முன்தினம் இரவு பழனிசெட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அவர் புகாரில், 'துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுணடம் ராஜபாண்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தேன். இரு மாதங்களாக வட்டி செலுத்த வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்குள் ராஜபாண்டி, மகேஷ், சுந்தர், விக்னேஷ், மேலும் இருவர் அத்துமீறி வந்தனர். என்னையும், என்மகனையும் தாக்கி வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், ஏ.டி.எம்., கார்டை எடுத்துக் கொண்டனர். எங்களை காரில் கடத்தி சென்றனர். கடத்தியதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக கூறி திருமங்கலத்தில் இறக்கி விட்டுச் சென்றனர் என்றிருந்தது. அவரது புகாரில் ராஜபாண்டி, மகேஷ், சுந்தர், விக்னேஷ், மேலும் இருவர் என 6 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை