உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறு இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு

தகராறு இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 25. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா மனைவி காயத்திரி 20, யை ஆபாச சைகை காட்டி அழைத்ததாவும், இதனை கண்டித்து சூர்யா, காயத்திரி உறவினர்கள் காமராஜ், அபி, மலர் மற்றும் சில பெண்கள் கம்பி மற்றும் கைகளால் வினோத்குமாரை அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வினோத்குமார் அனுமதிக்கப்பட்டார். வினோத்குமார் புகாரில் காமராஜ், அபி, காயத்திரி, சூர்யா உட்பட 6 பேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.காயத்திரி புகாரில்: தன்னை ஆபாச சைகைகாட்டி வினோத்குமார் அழைத்தார். இவரது புகாரில் வினோத்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை