உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி 31, இவர் அதே ஊரைச் சேர்ந்த அழகர் மனைவி வீரமணி என்பவரிடம் வார வட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்பு ரூ.1.50 லட்சம் வாங்கியுள்ளார். அதனை சில நாட்களுக்கு முன்பு வட்டியுடன் திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால் பணம் இன்னும் பாக்கியுள்ளது என்று வீரமணி வம்பு செய்துள்ளார். இரு நாட்களுக்கு முன் முருகேஸ்வரியின் வீட்டில் அத்துமீறி நுழைந்த வீரமணி, முருகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முருகேஸ்வரி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ