உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

கடமலைக்குண்டு : தேனியில் இருந்து வருஷநாடு வழியாக வாலிப்பாறை மலை கிராமத்திற்கு சென்ற அரசு பஸ் 60 பயணிகளுடன் சென்றது. நேற்று மாலை 5:00 மணி அளவில், அரசு பஸ் கடமலைக்குண்டு கிராமத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. அப்போது பஸ்சின் முன் குடிபோதையில் கத்தியுடன் நின்ற ஆசாமி டிரைவருடன் தகராறு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். கத்தியுடன் இருந்த ஆசாமி பஸ் டிரைவரை தாக்கி பக்கவாட்டு கண்ணாடியை கத்தியால் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டார். பயணிகள் அனைவரும் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் சுருளி ஆண்டவர் புகாரில் போதை ஆசாமி குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை