மேலும் செய்திகள்
மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது
02-Jun-2025
போடி: போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெரு சூர்யா 30. தனது பாட்டி போதுமணி வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தனது தந்தை முருகன் 58., தாயார் பசுபதி 53., யிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிதடி தகராறு ஏற்பட்டதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.இந்நிலையில் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு சூர்யா கேட்டுள்ளார். தந்தை, தாய் தூண்டுதலின் பேரில் கோணாம்பட்டியை சேர்ந்த சங்கரபாண்டி, காசி இருவரும் சேர்ந்து சூர்யாவை கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தினர். சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். சூர்யா புகாரில் போடி தாலுாகா போலீசார் தந்தை முருகன், தாயார் பசுபதி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
02-Jun-2025