உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  22 பவுன் தங்க நகைகள் வழங்காமல் மோசடி : அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

 22 பவுன் தங்க நகைகள் வழங்காமல் மோசடி : அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வாடிக்கையாளரிடம் போலி பத்திரம் வழங்கி ரூ.5 லட்சம் கடனாக பெற்றதுடன், அடகு வைத்த 22.25 பவுன் தங்கநகைகளை திரும்ப வழங்காமல் ஏமாற்றிய அடகு கடை உரிமையாளர் கார்த்திக் மீது ராஜதானி போலீசார் மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஆண்டிபட்டி கீ.காமாட்சிபுரம் கார்த்திக். இவர் தெப்பம்பட்டி நகை அடகு கடை உரிமையாளர். இக்கடையில், அதேப்பகுதியை சேர்ந்த குமார், தனது உறவினர்களின் 22.25 பவுன் தங்க நகைகளை ரூ.7.68 லட்சத்திற்கு அடகு வைத்தார். கடந்தாண்டு டிசம்பரில் அடகு வைத்த நகைக்கு வட்டியும், அசலுமாக சேர்த்து ரூ.8.13 லட்சத்தை கொடுத்து கடனை முடித்தார். இதன் பின்பு நகையை திரும்ப கேட்டுள்ளார். இதற்கு நகை கடை உரிமையாளர் கார்த்திக், 'தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நகையை கொடுக்க முடியவில்லை.' என தெரிவித்தார். மேலும், குமாரிடம் ரூ.5 லட்சம் பணம் கடனாக கேட்டார். கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்து, அதற்கு ஈடாக கார்த்திக் தனது மனைவி பெயரில் உள்ள அசல் பத்திரத்தை தருவதாக கூறி, போலி பத்திரத்தை கொடுத்தார். அதனை வாங்கிய குமார் கவனிக்காமல் ரூ.5 லட்சம் பணத்தையும் கொடுத்தார். மூன்று மாதங்களுக்கு பின் அடகு வைத்த நகையையும், கொடுத்த பணத்தையும் திரும்ப கேட்டுள்ளார். கார்த்திக், குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். ராஜதானி போலீசார் கார்த்திக் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி