மேலும் செய்திகள்
புகையிலை விற்றவர் கைது
04-Apr-2025
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த முஸ்தபா மனைவி செல்லம்மாள் 80. கடந்தாண்டு முஸ்தபா இறந்தார். மகன் நாகூர் அனிபாவுடன் செல்லம்மாள் வசித்து வருகிறார்.இவர்களுக்கும் உறவினர்களான ஷேக் அப்துல்லா, ஜியாவுதீன், கமால் ஆகியோருக்கு சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த நாகூர் அனிபாவை, சேக் அப்துல்லா உட்பட மூவரும் கை மற்றும் கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த நாகூர் அனிபா பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் மூவரிடம் விசாரிக்கின்றனர்.-
04-Apr-2025