பெண்ணிடம் தகராறு இருவர் மீது வழக்கு
தேனி: அரண்மனைப்புதுார் முல்லை நகர் முருகேஸ்வரி 40. இவரது கணவர் கணேசன் 6 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். முருகேஸ்வரி முல்லைநகர் தட்சிணாமூர்த்தி கோயில் பின்புறம் செல்லும் முல்லை ஆற்றில் துவக்க சென்றார். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சோலை 40, வினோத் 28 ஆகிய இருவர், தகாத வார்த்தைகள் பேசிஇடையூறு செய்து திட்டி தாக்கினர். பெண்ணின் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் சோலை, வினோத் இருவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.