உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் மீது வழக்கு

அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் மீது வழக்கு

தேனி, : ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி டி.மீனாட்சிபுரம் நடுத்தெரு பால்ராஜ் 50. போடி அரசு பஸ் டிரைவர். ஜூன் 8ல் மாணிக்காபுரத்தில் உள்ள தனது உறவினர் விசேஷத்திற்கு சென்று விட்டு அரசு பஸ்சில் தேனி புது பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது அடையாளர் தெரியாத 2 பேர் டூவீலரில், பஸ்சில் முன்பும் பின்பும் உரசும் வகையில் நெருங்கி வந்தனர். இதனால் பால்ராஜூம், அவர் வந்த அரசு பஸ்சின் டிரைவரும் இணைந்து, டூவீலரை கவனமுடன் இயக்கும்படி கண்டித்தனர். இந்நிலையில் தேனி புது பஸ் ஸ்டாண்டில் வருஷநாடு பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கிய போது, அங்கு வந்த நபர்கள், பால்ராஜை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட பால்ராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் டூவீலரில் வந்து மிரட்டிய மர்ம நபர்கள் குறித்து தேனி போலீசார் வீடியோ பதிவுகள் மூலம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி