சுவரில் போஸ்டர் ஒட்டிய இருவர் மீது வழக்கு
தேனி: தேனி மதுரை ரோட்டில் எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக சுவரில் இந்திய குடியரசு தொழிலாளர் சங்க மாநில இணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்டத் தலைவர் நடராஜன் இணைந்து போஸ்டர் ஒட்டினர். இதனை அவ்வழியாக ரோந்து சென்ற தேனி போலீஸ் ஸ்டேஷன் பாலதயாளன் பார்த்து, ஸ்டேஷனிற்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் ஜெகநாதன், நடராஜன் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.