மேலும் செய்திகள்
முன் விரோத தகராறில் ஓய்வு எஸ்.ஐ., ஓட்டல் சேதம்
01-Sep-2024
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் மனைவி ராஜேஸ்வரி 29. இவர் பெரியகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். கர்ப்பிணியான ராஜேஸ்வரி நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். மர்மநபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நாலேகால் பவுன் தங்கநகையை பறிக்க முயன்றார். சுதாரித்த ராஜேஸ்வரி கழுத்திலிருந்த செயினை கையில் பிடித்துக்கொண்டார். சத்தம்போடுவதற்குள், மர்மநபர் இரேண்டேகால் பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இரண்டு பவுன் நகை ராஜேஸ்வரி கையில் சிக்கியது. புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை விசாரிக்கிறார். --
01-Sep-2024