மேலும் செய்திகள்
குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
15-Nov-2024
போடி: போடியில் நேரு நினைவு தொண்டு நிறுவனம், நேரு குழந்தைகள் இல்லம் சார்பில் குழந்தைகள் தின விழா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா தலைமையில் நடந்தது.நிறுவன தலைவர் சிவனேஸ்வர மணிச்செல்வன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் அன்னலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விஜயலட்சுமி, முனியசாமி முன்னிலை வகித்தனர். ஆசிரியை முத்து கார்த்திகா வரவேற்றார். குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் பிரேமா, அலுவலர்கள் மனோகரன், ஓம் பிரகாஷ், ராஜ்குமார் செய்திருந்தனர்.
15-Nov-2024