மேலும் செய்திகள்
விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு
09-Dec-2025
சின்னமனூர்: சின்னமனூர் மெயின் ரோட்டில் சாக்கடை அடைத்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வர்த்தகர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சின்னமனூர் நகராட்சியில் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தெற்கு பகுதியில் பைபாஸ் ரோடு வரையும், வடக்கில் சீலையம்பட்டி வரையிலும் கடைகள் உள்ளன. இதில் மெயின்ரோட்டில் சீப்பாலக்கோட்டை ரோடு விலக்கில் இருந்து மார்க்கையன்கோட்டை ரோடு விலக்கு வரை மெயின்ரோட்டில், கிழக்கு பக்கம் உள்ள சாக்கடை அடைத்து துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி வர்த்தகர்கள் கூறுகையில், 'சீப்பாலக்கோட்டை ரோட்டில் இருந்து வந்து கொண்டிருந்த சாக்கடை கழிவு நீரை மெயின் ரோட்டில் தெற்கு பக்கம் திருப்பி விட்டுள்ளனர். எனவே வடக்கு பக்கம் கழிவு நீர் செல்லாமல் அப்படியே தேங்கியுள்ளது. இதில் குப்பையும் சேர்கிறது. இதனால் வர்த்தகர்கள் மெயின்ரோட்டில் கடைகளில் அமர்ந்து வியாபாரம் செய்ய முடியவில்லை. இது பற்றி நகராட்சி துப்புரவு பிரிவு அலுவலர்களிடம் கூறியும் நடவடிக்கை இல்லை,' என்கின்றனர். இந்த விசயத்தில் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
09-Dec-2025