மேலும் செய்திகள்
ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கல்
10-Jul-2025
தேனி: பேரூராட்சி அலுவலகங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், 'தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்.' என, கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 480 க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து பேரூராட்சி அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு விட்டன. அனைத்து பேரூராட்சிகளிலும் தினக்கூலி அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் பணிபுரிகிறோம். பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் சொத்து வரி வசூல் பதிவேற்றம், கடித பரிமாற்றங்கள், மின்னஞ்சல் அனுப்புதல், பிறப்பு, இறப்பு பதிவேடுகளில் பதிவேற்றம், வரவு செலவு கணக்குகள் பதிவேற்றம் என அனைத்து வகை கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளையும் மேற்கொள்கிறோம். ஆனால், தினக்கூலி பணியாளர்களாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறோம். இதுவரை எவ்வித அரசு பணப்பலன்களும் கிடைக்கவில்லை. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு என சங்கங்கள் கூட இல்லை. இதனால் எங்கள் கோரிக்கைளுக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் கூட செய்தது இல்லை. பணிநிரந்தரம், பணப்பலன்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.
10-Jul-2025