உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பத்தில் வெளியேறும் கழிவு நீர் விபரம் சேகரிப்பு

கம்பத்தில் வெளியேறும் கழிவு நீர் விபரம் சேகரிப்பு

கம்பம்: கம்பம் நகராட்சியில் இருந்து வீரப்ப நாயக்கன் குளத்தில் கலக்கும் தினமும் எவ்வளவு கழிவுநீர் கலக்கிறது என்ற விபரம் கணக்கீடு செய்யப்படுகிறது.கம்பத்தில் சேகரமாகும் சாக்கடை கழிவு நீர் முழுவதும் நகருக்கு கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வீரப்ப நாயக்கன் குளத்தில் சங்கமமாகிறது. இதனால் குளம் முழுவதும் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது.எனவே குளத்து பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்திகரித்து குளத்திற்குள் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கம்பம் நகரில் இருந்து கழிவு நீர் வெளியேறி குளத்தில் கலக்கும் இடங்களில் நாள் ஒன்றுக்கு கழிவு நீர் எவ்வளவு கலக்கிறது என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கம்பம் மட்டுமல்லாது நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை