| ADDED : ஜன 31, 2024 06:33 AM
தேனி: டிரைவிங் லைசென்ஸ் பெற குறைந்த செலவில் அரசு வழங்கிய கார்கள் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம், உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பொது மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்', என, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சொந்தமாக கார் இல்லாதவர்கள், சுலபமாக கார் டிரைவிங் லைசென்ஸ் பெறும் வகையில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தமிழக அரசு கார்கள் வழங்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம், உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களுக்கு தலா 1 கார்கள் வழங்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தை சேர்ந்த இலகு ரக கார ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 மட்டும் செலுத்தி அரசு வழங்கிய காரை தேர்விற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கார்கள் நேற்று ஜனவரி 29 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., செல்வக்குமார் காரை உரிமம் பெறும் தேர்வுக்காக விண்ணப்பதாரரிடம் வழங்கி, துவங்கி வைத்தார். உடன் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன், அலுவலக ஊழியர்கள் இருந்தனர்.