கல்லுாரி ஆண்டு விழா
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கலை, அறிவியல் கல்லூரியில் 16 வது ஆண்டு விழாநடந்தது. கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜோசிபரம்தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய்மங்களத்து முன்னிலை வகித்தனர். மதுரை காமராஜ் பல்கலை கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் முதல்வர் கண்ணதாசன், பெங்களூரு கிறிஸ்து பல்கலை இயக்குனர் பென்னி பங்கேற்றனர். கவுன்சில் முதல்வர் கண்ணதாசன் பேசுகையில், 'மாணவர்கள் எதிர்கால வளர்ச்சி திறன்பட கல்வி கற்பதில் தான் உள்ளது. கல்வியில் சாதித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னோடிகளாக உள்ளனர். அதன் வரிசையில் நீங்களும் இணைந்து முன்னேற வேண்டும்', என்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சி நடந்தது.கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.