கல்லுாரி மாணவர் மாயம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் செல்வம், இவரது மகன் ராகேஷ்சர்மா 21, ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார். நவம்பர் 7ல் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை செல்வம் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் மாணவர் குறித்து விசாரிக்கின்றனர்.