உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ அருகே மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மற்றும் பெரியகுளம் தாலுகாவில் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கபட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, வீடு இல்லாத ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் துரைக்கண்ணன், கருப்பையா, மாவட்ட பொருளாளர் ஞானம்மாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் அபுதாஹிர் நன்றி கூறினார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி