பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் குவிந்த பயணிகள்: இன்று பள்ளிகள் திறப்பு
தேனி : காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஊர்களுக்கு திரும்பியதால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.தேனி மாவட்டத்தை சேர்ந்த பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் அவர்களின் குழந்தைகளுக்கு காலாண்டு தேர்வு விடப்பட்டிருந்ததால், பலர் குடும்பத்துடன் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.மேலும் சிலர் வார இறுதி நாட்களை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பி இருந்தனர். இந்நிலையில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு, வேலை நாள் என்பதால் பலரும் நேற்று பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பினர்.இதனால் தேனி புது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.தேனியில் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் பலர் திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். ரயில்வே ஸ்டேஷனில் மதுரை பாசஞ்சர் ரயில், சென்னை அதிவேக ரயிலிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.