உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு காரில் சென்று காங்., மனு வழங்கல்

ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு காரில் சென்று காங்., மனு வழங்கல்

தேனி: தேனியில் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், காரில் சென்று நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.மாவட்ட காங்., கட்சியின் சார்பில், சட்டமேதை அம்பேக்கர் குறித்து அவதுாறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலக கோரி தேனி அரண்மனைப்புதுார் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கண்டன ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் சன்னாசி, பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர்கள் சையதுஅலி அபுதாஹீர், சம்சுதீன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி, எஸ்.சுி.எஸ்.டி., பிரிவு மாவட்டத் தலைவர் இனியவன், தேனி நகரத் தலைவர் கோபிநாத், தேனி வட்டாரத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்து முல்லைப் பெரியாறு பாலத்தை கடந்தவுடன் ஊர்வலம் நிறுத்தப்பட்டது. நிர்வாகிகள் காரில் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினர். ஊர்வலத்தில் நகரத் தலைவர்கள் கனகசீத்தாமுரளி, முஷாக்மந்திரி, பழனிமுத்து, போஸ், ஜெயபாண்டி, வட்டாரத் தலைவர்கள் தங்கம், ஜீவா, சத்தியமூர்த்தி, அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை