மேலும் செய்திகள்
த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
19-Nov-2024
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் காங்., வட்டார, நகர நிர்வாகிகள், செயல் வீரர்கள் கூட்டம் சக்கம்பட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.வட்டாரத் தலைவர் ரவி தலைமை வகித்தார். நகரத் தலைவர் சுப்பராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்டத் தலைவர் முருகேசன், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் தலைவர் செல்வராஜ்பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜாராம், நகரத் துணைத் தலைவர் வேல்மணி, வட்டாரச் செயலாளர் பாலமுருகன், வழக்கறிஞர் மலைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
19-Nov-2024