உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொடர் மழை வெற்றிலை வரத்து குறைவு: விலை உயர வாய்ப்பு

தொடர் மழை வெற்றிலை வரத்து குறைவு: விலை உயர வாய்ப்பு

கம்பம்,: தொடர் மழை காரணமாக வெற்றிலை வரத்து குறைந்துள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. இதனால் வானம் மேக மூட்டமாகவும், சூரிய வெளிச்சம் முழுமையாக இல்லாத நிலை உள்ளது. இதனால் சின்னமனூர், கம்பம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள வெற்றிலை கொடிக்கால்களில் கொடி கட்டுவது, கீரை வெட்டுவது உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வெற்றிலை பறிக்கும் பணி மட்டும் நடக்கிறது. தொடர் மழையால் வெற்றிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சாகுபடியாளர்கள் கூறுகையில் , ' ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும், சூரிய வெளிச்சம் இல்லாததாலும் மகசூல் பாதிப்பு உள்ளது. 100 கிலோ வர வேண்டிய கொடிக் காலில் 50 கிலோ வெற்றிலை வருகிறது. இதனால் விலை உயர வாய்ப்புள்ளது. மழை குறைந்தால்தான் வெற்றிலை மகசூல் இயல்பு நிலைக்கு திரும்பும். கருப்பு வெற்றிலை கிலோ ரூ.180, வெள்ளை வெற்றிலை ரூ.280 என்ற விலையில் இரண்டிற்கும் ரூ. 20 அதிகரித்துள்ளது. இன்னமும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை