மேலும் செய்திகள்
தேர்வான ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி
4 minutes ago
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
02-Dec-2025
ஆற்றில் மாணவரை தேடும் பணி தீவிரம்
02-Dec-2025
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
02-Dec-2025
கூடலுார்:விபத்துகளை தவிர்க்க அதிவேகமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரைவர்களின் துாக்கம் போக்க சுக்கு மல்லி காபி வழங்க வேண்டியது அவசியமாகும்.சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நவ.16 மாலை நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் தினந்தோறும் பக்தர்களின் நெரிசல் அதிகமாக உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் முடிந்தபின் ஐயப்ப பக்தர்கள் விரைவாக ஊர் திரும்பும் வகையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. மேலும் வாடகை கார்கள் அடுத்த வாடகைக்கு செல்வதற்காக டிரைவர்கள் வேகமாக ஓட்டி வருகின்றனர். தமிழக கேரள எல்லையான குமுளி மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளை கொண்டதாக உள்ளது. வாகனங்கள் அதி வேகமாக வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கடந்த ஆண்டு சீசனில் தரிசனம் முடிந்து திரும்பி அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 8 பக்தர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மிகப்பெரிய விபத்தை தடுக்கும் வகையில் போலீசார் குமுளியில் முகாமிட்டு சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்களை நிறுத்தி வேகத்தை குறைத்துச் செல்ல விழிப்புணர்வு வழங்க வேண்டும். கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், வீரபாண்டி உள்ளிட்ட புறவழிச் சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து பக்தர்களின் வாகனங்களை கண்காணிக்க வேண்டும். இரவு நேரத்தில் வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களின் தூக்கத்தை போக்க சுக்கு மல்லி காபி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 minutes ago
02-Dec-2025
02-Dec-2025
02-Dec-2025