உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனியில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலை ஆறு மணிக்கு மேல் இணையவழி காணொளி ஆய்வுக் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ரூ.20 கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்துள்ள பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர் சரவணன், மாநிலச் செயலாளர் நீதிராஜா, மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தாஜூதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி