புலி தாக்கி பசு பலி
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கடலார் எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனைச் சேர்ந்தவர் சூப்பர்வைசர் கணேஷ்குமார். இவருக்குச் சொந்தமான பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட எண் 7ல் உடல் பாதி தின்ற நிலையில் பசு இறந்து கிடந்தது. புலி, பசுவை கொன்றதாக தெரியவந்தது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ்குமாரின் பசு ஒன்று புலியிடம் சிக்கி பலியானது. கடலார் எஸ்டேட் பகுதியில் புலியின் நடமாட்டம் அதிகரித்ததால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.