மேலும் செய்திகள்
புலியிடம் சிக்கி இரு பசுக்கள் பலி
11-Oct-2025
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான அருவிக்காடு எஸ்டேட், பாக்டரி டிவிஷனில் புலியிடம் சிக்கி பசு பலியானது. அங்கு தொழிலாளியாக வேலை செய்யும் மாரிமுத்துவின் பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அங்குள்ள சென்டர் டிவிஷனில் பசுவை புலி தாக்கி கொன்ற நிலையில் நேற்று தொழிலாளர்கள் பார்த்தனர். புலிகளிடம் சிக்கி தினமும் பசுக்கள் உயிரிழந்து வரும் நிலையில், புலிகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுப்பதில்லை. அதனால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணிக்கு சென்று திரும்பு கின்றனர்.
11-Oct-2025