உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிரிக்கெட் போட்டி: ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி

கிரிக்கெட் போட்டி: ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி

தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. தேனியில் நடந்த போட்டியில் ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, மேனகா மில்ஸ் ஜூனியர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜாக்கி போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. பாப் ஆனந்த்ராஜா 102, ரஞ்சித்குமார் 58, நாகராஜன் 52, ரன்கள் எடுத்தனர். ஹரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேசிங் செய்த மேனகா மில்ஸ் ஜூனியர் அணி 33 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 100 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. ரஞ்சித்குமார் 3 விக்கெட்டுகள் வீழத்தினார். ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !