மேலும் செய்திகள்
பிரீமியர் லீக் கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
23-May-2025
தேனி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 'ஏ டிவிஷன்' கிரிக்கெட் தொடர் போட்டி நடந்து வருகிறது.போட்டிகள் தேனி ஆயுதபடை மைதானம், கம்மவார் கல்வி வளாகம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மைதானம், சின்னமனுார் விகாஷா பள்ளி மைதனாங்களில் வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் நடக்கிறது.ஜாலி சிசி, காஸ்மோஸ்அணி மோதிய போட்டியில் ஜாலி சிசி29.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. காஸ்மோஸ் அணி 23.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி வீரர் வீராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.ரத்தினம் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த கே.ஆர்.சி.சி., 33.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாண்டி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.மேனகா மில்ஸ் அணி 44.1 ஓவரில் 254 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஒய்.எஸ்.சி.ஏ., அணி 35 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியடைந்தது.ஜாலி சிசி அணி, மேனகா மில்ஸ் ஜூனியர் அணிகள் மோதிய போட்டியில் மேனகா மில்ஸ் ஜூனியர் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் எவர் கிரின் அணி 197 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆடிய ஸ்மாஷர்ஸ் அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
23-May-2025