| ADDED : அக் 15, 2025 06:50 AM
தேனி : தேனி சைபர் கிரைம் போலீசார் சார்பில், இணையவெளி சைபர் குற்றங்களில் இருந்து பொது மக்கள், கல்லுாரி மாணவர்கள் எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கொட்டக்குடி ஆற்றுப் பாலத்திற்கு அருகே துவங்கிய ஊர்வலத்தை எஸ்.பி., சினேஹா பிரியா கொடி அசைத்து துவக்கி வைத்தார். சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்.ஐ.,க்கள் தாமரைக்கண்ணன், தொழில்நுட்பப் பிரிவு எஸ்.ஐ., அழகுபாண்டி, தேனி எஸ்.ஐ.,க்கள் இளங்குமரன், முருகேசன் பங்கேற்றனர். ஊர்வலம் நேருசிலை வழியாக சென்று பங்களாமேட்டில் நிறைவடைந்தது. ஏ.டி.எஸ்.பி., சைபர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் சுப்ரமணி, கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, மாணவர்கள், போலீசார் பங்கேற்றனர். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.