உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பமெட்டு ரோடு சேதம்

கம்பமெட்டு ரோடு சேதம்

கம்பம்: கம்பத்தில் இருந்து கம்பமெட்டு செல்லும் ரோட்டில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் ரோடு சேதமடைந்துள்ளது.திண்டுக்கல முதல் குமுளி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பல ஊர்களில் பைபாஸ் அமைக்கப்பட்டுள்ளது. இருவழிச் சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற உள்ளது. கம்பத்தில் இருந்து கம்பமெட்டு வழியாக தினமும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இதில் கம்பம் பைபாஸ் ரோட்டில் இருந்து கம்பமெட்டு ரோட்டிற்கு திரும்பும் இடத்தில், மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் ரோடு சேதமடைந்துள்ளது. அதிக வாகனங்கள் செல்வதால், நாளுக்கு நான் ரோடு பள்ளமாக மாறி வருகிறது . சேதமடைந்த ரோட்டை பராமரிப்பு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி