உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சேதமடைந்த கட்டடம் இடிப்பு பாதுகாப்பு இல்லாத பள்ளி நெருக்கடியில் மாணவர்கள் தவிப்பு

 சேதமடைந்த கட்டடம் இடிப்பு பாதுகாப்பு இல்லாத பள்ளி நெருக்கடியில் மாணவர்கள் தவிப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டடம் இடிக்கப்பட்டதால் திறந்த வெளியாக உள்ளதால் ஆவணங்கள் பாதுகாப்பின்றி உள்ளன. டி.கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 130 மாணவர்களும், இதே வளாகத்தின் பின் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 151 மாணவர்களும் படிக்கின்றனர். இரு பள்ளி மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லை. இட நெருக்கடியால் மாணவர்களின் கற்றல் திறன் பாதித்துள்ளது. சுகாதார வளாகம் இல்லை. உயர்நிலைப் பள்ளிக்கான மூன்று வகுப்பறை கட்டடம், சுற்றுச்சுவர் சேதமடைந்திருந்தது. இப் பகுதிக்கு மாணவர்கள் அனுமதிப்பதில்லை. அலுவலக அறையாக பயன்படுத்தினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கல்வித்துறை சார்பில் சேதமடைந்த கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்டது. இதனால் அரசு உயர்நிலைப் பள்ளி திறந்தவெளியாக உள்ளது. முன்பு பாதுகாப்பு கேட் இருந்தபோதும் பள்ளி விடுமுறை நாட்களில் சிலர் உள்ளே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர். தற்போது திறந்தவெளியாக உள்ளதால் பள்ளியில் உள்ள முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்களுக்கு பாதுகாப்பில் லாமல் உள்ளது. தலைமை ஆசிரியை சண்முகக்கனி கூறுகையில், ' பள்ளி திறந்த வெளியாக உள்ளதால் பாதுகாப்பு இன்றி உள்ளது. எந்த துறையினர் கட்டடத்தை இடித்தனர் என்பது தெரியாது. கல்வித்துறை நிர்வாகம் முதல் கட்டமாக தடுப்பு வேலிகள் அமைக்கவும், புதிதாக 6 வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ