உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த தொட்டி: வீணாகும் தண்ணீர்

சேதமடைந்த தொட்டி: வீணாகும் தண்ணீர்

கூடலுார், : கூடலுார் ஞானியர்கோனார் தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.தொட்டியில் ஏற்பட்டுள்ள ஓட்டையால் கடந்த சில நாட்களாக தண்ணீர் நிரப்பும்போது வீணாக வெளியேறுகிறது.தொட்டியின் அடிப்பாகத்தில் சேதமடைந்துள்ளதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி அமைக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை