உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சேதமடைந்த பார்வையாளர் மாடம்: சேதமடைந்த மின் இணைப்பு பெட்டியால் ஆபத்து

 மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சேதமடைந்த பார்வையாளர் மாடம்: சேதமடைந்த மின் இணைப்பு பெட்டியால் ஆபத்து

தேனி: தேனியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் மாடம் சேதமடையும் நிலையிலும், அங்கு மின் இணைப்புகள் ஆபத்தான நிலையில் உள்ளன. மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்டு தோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பள்ளி,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர அடிக்கடி மாவட்ட, மாநில விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது மாணவர்கள் தவிர பெற்றோர்கள், பார்வையாகளர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள், நிகழ்ச்சிகளை அமர்ந்து பார்வையிட வசதியாக பார்வையாளர் மாடம் உள்ளது. இந்த மாடத்தில் 300 பேர் வரை அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் உள்ளது. பார்வையாளர் மாடத்தின் கூரையில் தண்ணீர் தேங்குவதால் உட்பகுதியில் சில இடங்களில் சேதமடைந்து வருகிறது. அங்கு பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பு வழங்கும் பெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேதமடையும் கூரை, ஆபத்தான மின் பெட்டியை சீரமைக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி