உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாசனக் கால்வாயில் ஆபத்தான குளியல்

பாசனக் கால்வாயில் ஆபத்தான குளியல்

ஆண்டிபட்டி : வைகை அணை அருகே பாசனத்திற்கு நீர் செல்லும் கால்வாயில் சிறுவர்கள் ஆபத்தான குளியல் மேற்கொள்கின்றனர். வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு ஒரு போக பாசன நிலங்களுக்கு செப்.18ல் வினாடிக்கு 1130 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1530 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது கால்வாயில் அதிக அளவு நீர் பல கிராமங்களை கடந்து செல்கிறது. வழியோர கிராமங்களில் பொது மக்கள் நீரில் இறங்கி துணிகள் துவைத்து, குளித்து செல்வது ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பல இடங்களில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் கால்வாய் நீரில் நீந்தியும், 'டைவ்' அடித்தும் விளையாடுகின்றனர். நீர்வளத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு தந்தாலும் பலரும் கண்டு கொள்ளாமல் கால்வாய் நீரில் இறங்குவதை தொடர்கின்றனர். உள்ளாட்சித்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை