உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தவறான சிகிச்சையால் உயிரிழப்பா; உறவினர்கள் கிளினிக் முற்றுகை

தவறான சிகிச்சையால் உயிரிழப்பா; உறவினர்கள் கிளினிக் முற்றுகை

பெரியகுளம் : தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் சிகிச்சையளித்த டாக்டரின் கிளினிக்கை முற்றுகையிட்டனர்.பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் ராம்குமார் 47.இவர் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரது வீட்டருகே கிளினிக் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சேவுகபாண்டி 45, என்பவர் உடல் வலி மற்றும் அரிப்புக்கு டாக்டர் ராம்குமாரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.சேவுகபாண்டிக்கு ஊசி போட்டு ராம்குமார் முதலுதவி செய்தார். சிறிது நேரத்தில் சேவுகபாண்டி இறந்தார். தவறான சிகிச்சையால் சேவுகபாண்டி இறந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.தென்கரை இன்ஸ்பெக்டர் அமுதா பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். சேவுகபாண்டி உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை