உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பாபிேஷக பாதுகாப்பில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வலியுறுத்தல்

கும்பாபிேஷக பாதுகாப்பில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வலியுறுத்தல்

தேவதானப்பட்டி: மேல்மங்கலம் கோயில் கும்பாபிஷேகம் நிறைவு பெறும் வரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பட்டாளம்மன் முத்தையா கோயிலில் நாளை மறுநாள் (ஜூன் 27 ல்)கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கீழத்தெரு, அம்மாபட்டிதெரு சமுதாயத்தினரிடையே நிலவும் பிரச்னைக்கு பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக் கூட்டத்தில் இரு தரப்பினரும் இணைந்து கும்பாபிஷேகம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று யாகசாலை அமைக்கும் பணி செயல் அலுவலர் வேலுச்சாமி மேற்பார்வையில் நடந்தது. அந்த இடத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.சிறிது நேரம் பதட்டம் நிலவியது. அப்போது நான்கு போலீசார் மட்டுமே இருந்தனர். பாதுகாப்பு குறைவாக இருந்ததால் இரு தரப்பினரிடையே அமைதியை நிலை நாட்ட போலீசாரால் கூற முடியவில்லை. 42 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கும்பாபிஷேகம் என்பதால் டி.எஸ்.பி., தலைமையில் விழா நிறைவு பெறும் வ ரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !