மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 7,810 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
22-Oct-2024
கம்பம்: தீபாவளியை முன்னிட்டு கம்பமெட்டுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க ஏலத் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்டங்களில் தங்கி வேலை செய்பவர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள்.இடுக்கி மாவட்டத்தில் குறிப்பாக நெடுங்கண்டம், பாரத்தோடு, ஆமையாறு, கம்பமெட்டு, புரியன் மலை, வண்டன் மேடு, சதுரங்காபாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலத் தோட்டங்களில் தங்கி வேலை செய்யும் தமிழர்கள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்கள் கேரள பஸ்களில் கம்பமெட்டு வரை வருவார்கள். கம்ப மெட்டிலிருந்து கம்பம் வர பஸ் வசதி கிடையாது . தனியார் டிரிப் அடிக்கும் ஜீப்புகளும் தற்போது கிடையாது.கம்பத்தில் இருந்து கம்பமெட்டுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்று ஏலத் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22-Oct-2024