உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணிக்கு வராத பி.இ.ஓ., சம்பளத்தை நிறுத்தி வைக்க டி.இ.ஓ., உத்தரவு

பணிக்கு வராத பி.இ.ஓ., சம்பளத்தை நிறுத்தி வைக்க டி.இ.ஓ., உத்தரவு

தேனி: பணிக்கு வராமல் இருந்த தேனி மாவட்டம் சின்னமனுார் வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) சதீஷ்குமாருக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை நிறுத்தி வைக்க கருவூலத்திற்கு டி.இ.ஓ., நாகலட்சுமி உத்தரவிட்டுள்ளார். தேனி தொடக்க கல்வி துறையில் சின்னமனுார் வட்டாரக் கல்வி அலுவலராக சதீஸ்குமார் பணிபுரிகிறார். இவர் ஆக.4 முதல் அலுவலகம் வராமல் இருந்தார். மேலும் அவர் மீதான 6 புகார்கள் தொடக்கக் கல்வித்துறை டி.இ.ஓ.,விற்கு சென்றன. இதன் மீது ஆக.19ல் தேனி டி.இ.ஓ., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் சதீஷ்குமார் ஆஜராகவில்லை. பி.இ.ஓ., அலுவலகத்திற்கும் செல்லவில்லை. இந்நிலையில் NO WORK, NO PAY' என்ற அடிப்படையில் அவருக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்தம் செய்து டி.இ.ஓ., நாகலட்சுமி உத்தரவிட்டுள்ளார். உத்தரவு நகலை மாவட்ட கருவூலம், பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !