உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெல் சாகுபடியில் மகசூல் புள்ளியியல் துறை ஆய்வு

நெல் சாகுபடியில் மகசூல் புள்ளியியல் துறை ஆய்வு

கூடலுார்: கூடலுாரில் நெல் சாகுபடியில் மகசூல் குறித்து வேளாண் புள்ளியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.கூடலுாரில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் என்.எல்.ஆர். வகை நெல் பயிரிடப்பட்டுள்ளது. மகசூல் குறித்த ஆய்வு புள்ளியியல் துறை இயக்குனர் ஜான்சிராணி தலைமையில் நடந்தது.ஆய்விற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து இரண்டு விவசாயிகளின் நெல் வயலில் 25 சதுர மீட்டர் பரப்பளவில் நெல் அறுவடை செய்யப்பட்டு, அதிலிருந்து வரும் நெல் மகசூல் அளவீடு செய்யப்பட்டது. இதில் ஒரு விவசாயியின் நெல் வயலில் 22 கிலோவும், மற்றொரு விவசாயியின் வயலில் 17 கிலோவும் மகசூல் கிடைத்தது.வட்டார புள்ளியியல் துறை ஆய்வாளர் சரவணகுமார், உதவி வேளாண் அலுவலர்கள் அறிவழகன், வளர்மதி கலந்து கொண்டனர்.இதில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் முகாமிட்டுள்ள உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை தொழில் நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சந்திரகுமார், அழகுராஜா, தினேஷ்குமார், யுவன் கிருஷ்ணா, சஞ்சீவி, வேல்மணி, மோகந்த், ஞானசேகர், மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் ராலியாபேகம், ரதி, ரித்திகா, சகானா, ரூபியா, சக்தி, ரித்திகா, சக்திஜா, சம்யுக்தா உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி