உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தேனி, : மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் கோயில்களில் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. தேனி : தேனி நகர் பகுதியில் பெத்தாட்சி விநாயகர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு வெற்றிக்கொம்பன் விநாயகர் கோயில், அரசு நகர் அரச மர விநாயகர் கோயில், மதுரை ரோடு அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள மெய்கண்ட இரட்டை விநாயகர் கோயில், சிப்காட் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மலர், வெள்ளிக்கவசம், அருகம்புல் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. காலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் நகர் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 986 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடந்தது. ஹிந்து முன்னணி சார்பில் பெரியகுளம் ரோட்டில் பெத்தாட்சி விநாயகர் கோயில் எதிரே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் உமையராஜன், முருகன் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் மணிகண்டன் ஏற்பாடுகள் செய்திருந்தார். நகராட்சி அலுவலகம் அருகே ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகி ராமராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கனகுபாண்டி, ராமமூர்த்தி விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆண்டிபட்டி : சீனிவாசா நகரில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பா.ஜ., நகர் தலைவர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் செல்வம், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மத்திய அரசு வழக்கறிஞர் குமார், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள் குறித்து பேசினர். குழந்தைகளுக்கு சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பரிசாக வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட், வைகை ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்தனர். ஆண்டிபட்டி பாலவிநாயகர், அரசமரத்து விநாயகர், சக்கம்பட்டி கல்கோயில் ராஜவிநாயகர், காரமடம் விநாயகர், மேல விநாயகர், தெற்குத் தெரு விநாயகர், தோப்பூர் தெரு காசி விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு பொங்கலிட்டு, சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொறி, இனிப்பு வகைகள் படையல் செய்து, சிறப்பு பூஜைகளுடன் பொது மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். பெரியகுளம் : பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயில் படித்துறை ஐஸ்வர்ய விநாயகர் கோயில், ஜெயம் விநாயகர் கோயில், குருவப்ப பிள்ளையார் கோயில், பாலசாஸ்தா கோயில் கன்னிமூல கணபதி, கைலாசநாதர் கோயில் அடிவாரம் குடவரை வெள்ளை விநாயகர் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் விநாயகர் கோயில், தெற்குத்தெரு ராஜவிநாயகர் கோயில், சங்க விநாயகர் கோயில், மாவட்ட அரசு மருத்துவமனை வளாகம் நலம் விநாயகர் கோயில், வடுகபட்டி முக்கரை விநாயகர் கோயில், பஞ்சமுக விநாயகர் கோயில், செல்வ விநாயகர் கோயில், லட்சுமி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. கம்பம்: ஆதி சக்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கம்பராயப் பெருமாள் கோயில், கவுமாரியம்மன் கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் பட்டது. சின்னமனுார்: சிவகாமியம்மன் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்களில் விநாயகர் அருகம்புல் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டன. திரளான பொது மக்கள் தரிசனம் பெற்றுச் சென்றனர். உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் கோயிலில் விநாயகருக்கு கொலுக்கட்டைகள் படைத்து அபிஷேகம் நடைபெற்றது திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். கூடலுார்: ஹிந்து முன்னணி சார்பில் 31ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. நகரத் தலைவர் ஜெகன் தலைமையில் புது பஸ் ஸ்டாண்ட் பெத்தனசாமி கோயில் அருகே விநாயகர் சிலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கருப்பசாமி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடக்கு ரத வீதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா தர்ம விழிப்புணர்வு துறை, பாரதிய கிசான் சங்கம், பா.ஜ., கட்சி சார்பில் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க், கருணாநிதி காலனி, எம்.ஜி.ஆர். காலனி, கன்னிகாளிபுரம், அண்ணாநகர், அரசமரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலை அமைத்து விழா கொண்டாடப்பட்டது. மூணாறு: மூணாறில் ஹிந்து முன்னணி சார்பில் 25ம் ஆண்டு சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகரில் ஆறு இடங்கள், கன்னிமலை எஸ்டேட்டில் லோயர், டாப் ஆகிய டிவிஷன்கள், சைலன்ட்வாலி எஸ்டேட்டில் ஒன்றாம், மூன்றாம் ஆகிய டிவிஷன்கள், சோலைமலை, நயமக்காடு, போதமேடு, சொக்கநாடு, பழைய மூணாறு ஆகிய பகுதிகளில் 17 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆக.31ல் மூணாறில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு சென்று கன்னியாறு ஆற்றில் கரைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் கந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை