உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கூடலுாரில் - சீறிப் பாய்ந்த காளைகள்

இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கூடலுாரில் - சீறிப் பாய்ந்த காளைகள்

கூடலுார்: கூடலுாரில் முத்தாலம்மன் கோயில் விழாவை முன்னிட்டு நடந்த இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன. கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடந்தது. ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க செயலாளர் அருண்குமார், பொருளாளர் சரவணன் தலைமையில், விழாக்குழு நிர்வாகிகள் பிரபு, அச்சுதன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், வழக்கறிஞர் நிசாந்த் போட்டியை துவக்கி வைத்தனர். முன்னதாக காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான், நடு மாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் போட்டிகள் கூடலுார் - லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை பகுதியில் இருந்து 230 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்பாள், கணபதி ஆகியோரின் காளை முதலிடமும், கம்பம் ரஹீம் ராவுத்தர் காளை இரண்டாவது இடமும், கூடலுார் வைரவனின் காளை மூன்றாவது இடத்தையும் பிடித்தது. முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ 30 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் அனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம், இளைஞர் நல அறக்கட்டளை, இளைஞர் அணி, உழவர் சங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை