உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்தில்  சிக்கிய டி.எஸ்.பி., வாகனம்

விபத்தில்  சிக்கிய டி.எஸ்.பி., வாகனம்

தேனி: தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., சக்திவேல். இவர் வழக்கு விசாரணை தொடர்பாக அரசு ஜீப்பில் நேற்று பெரியகுளம் சென்றுவிட்டு தேனி எஸ்.பி., அலுவலகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். ஜீப்பை அவரது டிரைவர் அருண் ஓட்டினார். அன்னஞ்சி பைபாஸ் ரோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த போது, ஜீப்பிற்கு முன் டூவீலரில் சென்ற பெண், சிக்னல் காட்டாமல் திடீரென வலதுபுறம் திருப்பியுள்ளார். இதனால் டி.எஸ்.பி., ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் இருந்த மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தன. டி.எஸ்.பி., சக்திவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவ்விபத்தில் டி.எஸ்.பி., ஜீப் டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை