உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொடர் கோடை மழையால் காய்கறி விலை கிடு கிடு உயர்வு! தேவைக்கான காய்கறி கிடைக்காமல் சிரமம்

தொடர் கோடை மழையால் காய்கறி விலை கிடு கிடு உயர்வு! தேவைக்கான காய்கறி கிடைக்காமல் சிரமம்

பெரியகுளம் பகுதிகளான கீழ வடகரை, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், எ. புதுப்பட்டி, சருத்துப்பட்டி, ஜல்லிப்பட்டி, காமக்காபட்டி, எருமலைநாயக்கன்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை உட்பட பல்வேறு காய்கறிகள் சாகுபடி ஆகின்றன. அதேபோல் கூடலுார், ஆண்டிபட்டி, சின்னமனுார், போடி பகுதிகளில் மலை காய்கறிகள், முட்டைக்கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடியாகின்றன.இம்மாத துவக்கத்தில் வெயிலின் ஏற்பட்ட அதீத வெப்பத்தின் தாக்கமும், மே 9 முதல் கோடை கால வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது. இதனால் காய்கறிகளுக்கு ஏற்ற பருவம் தவறிய மழையால் தக்காளி உட்பட காய்கறிகள் மகசூல் பாதியளவு பாதிக்கப்பட்டு உள்ளன.

காய்கறி விலை உச்சம்

பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் இம்மாதம் துவக்கத்தில் ரூ. 20 க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ. 60 ஆகவும், ஒரு 40க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.100 ஆகவும், ரூ.20 க்கு விற்ற வெண்டை ரூ. 60 ஆகவும், ரூ. 100 க்கு விற்ற முருங்கை பீன்ஸ் ரூ.200 ஆகவும், ரூ.20 க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.40 ஆகவும், ரூ. 150 க்கு விற்ற பட்டர் பீன்ஸ் ரூ.200 ஆகவும், ரூ. 30 க்கு விற்ற கொத்தவரை, ரூ.30 க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.70 ஆகவும், ரூ.30 என விற்ற புடலை, ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு காய்கறி விலை அதிகரித்துள்ளதால், திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா உள்ளிட்ட விசேஷ வைபவங்களுக்கு காய்கறி வாங்கும் மக்கள் மிகுந்த செலவினங்களுக்கு ஆளாவதால், சிரமப்படுகின்றனர். மேலும் நடுத்தர குடும்பத்தினர் காய்கறிகள் வாங்க தயங்கி வருகின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி