உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதிய குடிநீர் சப்ளையால் கம்பத்திற்கு அம்ரூத்திட்ட நிதி ஒதுக்கீடு இல்லை

போதிய குடிநீர் சப்ளையால் கம்பத்திற்கு அம்ரூத்திட்ட நிதி ஒதுக்கீடு இல்லை

கம்பம்: மாவட்டத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கம்பம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை.ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டம் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தியது. நகராட்சிகளில் அம்ரூத் என்ற பெயரிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் தேனி, போடி, சின்னமனூர் நகராட்சிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இத் திட்டத்தில் கம்பம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது குறித்து கம்பம் நகராட்சி விசாரித்த போது ,நபர் ஒன் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கி வருகிறோம். லோயர்கேம்ப்பில் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்பட்ட திட்டம் செயல்படுகிறது. சுருளிப்பட்டி ரோட்டில் பம்பிங் ஸ்டேசன் செயல்படுகிறது. போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்வதாலும், தட்டுப்பாடு இல்லாததாலும் அம்ரூத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கவில்லை என்கின்றனர்.கம்பத்தில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி