| ADDED : ஜன 10, 2024 12:43 AM
தேனி : தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி நடந்தது.இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு போட்டிகளுக்கான தலைப்பு 10 நிமிடங்களுக்கு முன் வழங்கப்பட்டது. கவிதைப்போட்டியில் தேனி வேலம்மாள் பள்ளி மாணவி ரிதிபொன்மாறனி முதலிடம், போடி சிசம் மேல்நிலைப்பள்ளி மாணவி ரித்பவுசியா 2ம் இடம், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகா 3ம் இடம் வென்றனர்.கட்டுரைப்போட்டியில் போடி சிசம் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுபிரிஷில்லா முதலிடமும், எரசக்கநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் புவனேஸ்வரன் 2ம் பரிசும், போடி பங்கஜம் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகாதேவி 3ம் இடம் பிடித்தனர். பேச்சுப்போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி முதலிடம், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அரவிந்த் 2ம் இடம், கம்பம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி பாண்டீஸ்வரி 3ம் இடம் வென்றனர். போட்டிகளை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தலைமையிலான அலுவலர்கள், ஆசிரியர்கள் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.