உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

 நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கூடலுார்: கூடலுார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தரம் குறைவு எனக் கூறி விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்க மறுத்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். கூடலுார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதில் நெல்லின் தரம் மற்றும் கலர் குறைவாக இருப்பதாக கூறி அதனை கொள்முதல் செய்ய அலுவலர்கள் மறுத்தனர். இதனால் விவசாயிகள் கடந்த 15 நாட்களாக குவித்து வைத்து காத்திருந்தனர். உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என நேற்று விவசாயிகள் திரண்டு முற்றுகையிட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு 2 நாட்களில் கொள்முதல் செய்வதாக உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி