விவசாயிகள் உண்ணாவிரதம்
தேனி : அகமலை ஊராட்சிக்குட்பட்ட நிலங்களில் விவசாயம் செய்பவர்களை அங்கிருந்து வெளியேற கூறி வனத்துறை நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து தேனி பங்களாமேட்டில் பருகால்மலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்நடந்தது.சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணித்தலைவர் வெற்றி வேல், அகமலை வனக்குழுத்தலைவர் ரஞ்சித் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.